அரியலூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு மூலம் நூறு நாட்களுக்குக் குறையாமல் வேலை அளிக்கவும் மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தவும் இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதிய திட்டம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய திட்டம், விதவைகள் ஓய்வூதிய திட்டம் ஆகிய நலத்திட்டங்கள் தடையில்லாமல் வழங்க வேண்டும் எனவும் விவாதிக்கப்பட்டது.
வளர்ச்சி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பொதுமக்கள் நலத்திட்டம் பற்றி ஆலோசனை மேலும் பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகளுக்கு உடனடியாக வீடு கட்ட ஆணை வழங்க வேண்டும், நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டம் மூலம் நகர்ப்புற பகுதிகளில் கட்டமைப்பு வசதி ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரத்னா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 20 ஆண்டுகள் முன்பு தொலைந்த பல் - மூக்கில் வளர்ந்த அதிசயம்!