அரியலூர் மாவட்டத்தில், நகர்ப்பகுதியில் இரண்டு இடங்களிலும், ஜெயங்கொண்டத்தில் ஒரு இடத்திலும் சேர்த்து மூன்று இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அம்மா உணவகத்தில் மூன்றுவேலையும் வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ள மக்களுக்கு தினந்தோறும் விலையில்லா உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இதனை இன்று அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் ஆய்வு செய்தார். அங்கு வந்திருந்த பொதுமக்களுக்கு உணவுகளை விநியோகம் செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறுகையில்,"அம்மா உணவகம் மூலம் தமிழ்நாட்டில் நாள் ஒன்றிற்கு 7 லட்சம் பேருக்கும் அரியலூரில் மூன்றாயிரம் பேருக்கும் விலையில்லா உணவு வழங்கப்படுகிறது.