தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலியல் வன்புணர்வு செய்த அதிமுக பிரமுகர் தலைமறைவு! - ஜெயங்கொண்டம்

அரியலூர்: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு தலைமறைவாகியுள்ள அதிமுக பிரமுகரை காவல் துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.

அதிமுக பிரமுகர்

By

Published : Oct 1, 2019, 2:35 PM IST

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசங்கரி. இவருக்கு திருமணம் முடிந்து ஒரு ஆண் குழந்தை உள்ளது. சிவசங்கரிக்கு சிறிது மனநலம் பாதிக்கப்பட்டதால், அவரது கணவர் பிரிந்து வேறு பெண்ணுடன் மறுமணம் செய்துகொண்டார். இதனால் சிவசங்கரி தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அதிமுக ஆண்டிமடம் ஒன்றிய பொருளாளராக இருக்கும் செல்வராஜ் என்பவர் சிவசங்கரியின் உறவினராவார். இவர் சிவசங்கரியை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு, இந்த விவரம் பற்றி வெளியே யாரிடமாவது தெரிவித்தால் கொலை செய்துவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

பாலியல் வன்புணர்வு செய்த அதிமுக பிரமுகர் தலைமறைவு

தற்பொழுது சிவசங்கரி ஆறு மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் பவானி, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் அதிமுக பிரமுகர் செல்வராஜை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், ஜெயங்கொண்டம் டி.எஸ்.பியிடம், சிவசங்கரியின் கர்ப்பத்திற்கு நான் பொறுப்பல்ல என செல்வராஜ் மனு ஒன்றை கொடுத்துவிட்டு பின்னர் தலைமறைவாகியுள்ளார். இந்த விவகாரம் அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்கலாமே: கல்லூரி பேராசிரியை கடத்தல் - அதிமுக பிரமுகர் மீது புகார்

ABOUT THE AUTHOR

...view details