தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘வாக்காளர்களைப் பலமுறை சந்தித்து வாக்கு கேட்க வேண்டும்’ - அரசுத் தலைமை கொறடா அறிவுரை!

அரியலூர்: வாக்காளர்களை ஒருமுறை அல்ல பலமுறை சந்தித்து வாக்கு கேட்க வேண்டும் என அதிமுகவின் உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்களுக்கு அரசுத் தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் அறிவுரை வழங்கியுள்ளார்.

admk local body candidates introduction meeting held in ariyalur
அரசு தலைமை கொறடா

By

Published : Dec 19, 2019, 3:14 AM IST

அரியலூரில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய அரசுத் தலைமை கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன், ‘நாடாளுமன்றத் தேர்தலில் மற்ற மாவட்டங்களைவிட அரியலூர் மாவட்டம் அதிக வாக்குகளைப் பெற்றதைப் போல் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலிலும் அதிக வாக்குகள் பெற்று, வெற்றி பெற வேண்டும்.

மேலும் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். வாக்காளர்களை பலமுறை சந்திப்பது மட்டுமல்லாமல் மக்களிடம் பொங்கல் பரிசு மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட அரசுத் திட்டங்களை தெளிவாக எடுத்து கூறினால் நாம் எளிதாக வெற்றி பெறலாம்’ என்றார்.

அரியலூரில் நடைபெற்ற அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

கூட்டத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் சமரசம், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற தலைவர் இளவரசன், அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: டெபாசிட் பணம் கட்டாததால் அதிமுக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு!

ABOUT THE AUTHOR

...view details