தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டா வழங்கிய இடத்தை தரக் கோரி ஆதிதிராவிட மக்கள் போராட்டம்! - Adidravidar people protest to demand the given patta land

அரியலூர்: வீட்டுமனை இல்லாத பட்டியலின மக்களுக்கு 2007 ஆம் ஆண்டு வழங்கிய இலவச வீட்டுமனைகளை அளந்துதர வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Adidravidar people protest

By

Published : Nov 25, 2019, 11:23 PM IST

அரியலூர் மாவட்டம் வாணாந்திரையன்பட்டினம் கிராமத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு 90 பட்டியலின குடும்பங்களுக்கு அரசின் சார்பில் இலவச வீட்டுமனை வழங்கி பட்டா கொடுக்கப்பட்டது.

ஆனால் இலவச வீட்டு மனை வழங்கி 12 ஆண்டுகள் ஆகியும் அந்த இடத்தை உரியவர்களுக்கு அளந்து பிரித்துத் தரவில்லை. அரசால் ஒதுக்கப்பட்ட இந்த இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், பட்டா வழங்கிய இடத்தை பிரித்துத்தர வலியுறுத்தி 90 பட்டியலின குடும்பங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று அலுவலகத்தின் வாயிலின் உள்ள தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆதிதிராவிட மக்கள் தரையில் அமர்ந்து போராட்டம்

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், வருவாய்த்துறையினர் இடத்தை அளந்து தர நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர்.

பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடியிடம் தங்களது கோரிக்கை குறித்த மனுக்களைக் கொடுத்தனர்.

இதையும் படிங்க: கிராமிய இசைக்கலைஞர்களுக்கு இலவச பாஸ் வழங்கக் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details