தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோர விபத்தில் மூவர் பலி! - விபத்து

அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் மூன்று பேர் பலியாகினர்.

accident

By

Published : May 1, 2019, 2:26 PM IST

ஜெயங்கொண்டம் அருகே காரும் வேனும் நேர் மோதிக் கொண்ட விபத்தில், நிகழ்விடத்திலேயே மூன்று பேர் பலியாகினர். மயிலாடுதுறையை அடுத்த பூவனூர் கிராமத்தைச் சேர்ந்த இவர்கள், வெளியூர் சென்றுவிட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இக்கோர விபத்து நேர்ந்துள்ளது. வாகனத்திலிருந்த கைப்பேசி மூலம் கிடைத்த தகவலின்படி ஒருவர் பெயர் ஜீவானந்தம்(23) என்பது தெரியவந்துள்ளது. மேலும், இருவர் குறித்த தகவல்களை மீன்சுருட்டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ஜெயங்கொண்டம் அருகே கோர விபத்து: 3 பேர் பலி!

வேனில் வந்த கும்பகோணம், பண்டாரவடை கிராமத்தைச் சேர்ந்த முகம்மது ஷபீக்(47) என்பவர் உள்பட அவரது உறவினர்கள் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். அனைவரையும் மீட்டு அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details