சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு சென்ற அரசு விரைவு பேருந்து அரியலூர் மாவட்டம் காரைக்குறிச்சி சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ரகுபதி என்பவர் உயிரிழந்துள்ளார்.
லாரியின் பின்னால் மோதிய பேருந்து; ஒருவர் பலி - அரியலூர்
அரியலூர்: லாரியின் பின்னால் அரசு விரைவு பேருந்து மோதியதில் ஒருவர் பலியானார்.
accident
மேலும் காயமடைந்த 10 பேர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். லாரி ஓட்டுனர் சாலை ஓரம் உள்ள கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.