அரியலூர் மாவட்டம் கோவில்எசனை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ்(61). இவருக்கு பாக்கியராஜ் என்ற மகனும், ஜான்கிலின் ரிட்டா என்ற மகளும் உள்ளனர். ஜான்கிலின் தனது மகள் கிரிஜாவை, தனது தம்பி பாக்கியராஜுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில், செல்வராஜ் தனது பேத்தியும், மருமகளுமான கிரிஜாவிடம் மதுபோதையில் அத்துமீறியுள்ளார். இதனைக் கண்ட கிரிஜாவின் தந்தை டிசோசா செல்வராஜுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
பேத்தியிடம் அத்துமீறிய தாத்தா: அடித்துக் கொலை செய்த மருமகன்! - தற்போதைய அரியலூர் செய்திகள்
அரியலூர்: மதுபோதையில் பேத்தியிடம் அத்துமீறிய தாத்தாவை அவரது மருமகன் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
a old man murderd by his nephew
கொலை செய்யப்பட்ட முதியவரின் வீடு
இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த டிசோசா மூங்கில் குச்சால் செல்வராஜை அடித்துள்ளார். டிசோசா பலமாக செல்வராஜை தாக்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த வெங்கானூர் காவல் துறையினர் கொலை செய்த டிசோசா மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்தச் சம்பவம் அக்கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலைசெய்த கணவர்: தேடுதல் வேட்டையில் தனிப்படையினர்!