அரியலூர் மாவட்டம், யுத்தபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த கோபி என்பவர், அதே கிராமத்தைச் சேர்ந்த ஏழு வயதான மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை சிறையில் அடைத்தனர்.
7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை - Ariyalur child sexuval harrasment
அரியலூர்: மாற்றுத்திறனாளி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
life
இந்த வழக்கு இன்று அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி சத்தியதாரா குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: ஆசைவார்த்தைக் கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய காதலன் மீது புகார்!