தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறை ரவுடி கொலை வழக்கில் 4 பேர் சரண்!

மயிலாடுதுறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி கொலை வழக்கில் தொடர்புடைய கூட்டாளிகள் 4 பேரும் அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

மயிலாடுதுறை ரவுடி கொலை வழக்கில் 4 பேர் சரண்
மயிலாடுதுறை ரவுடி கொலை வழக்கில் 4 பேர் சரண்

By

Published : Jul 24, 2020, 8:50 PM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை சேந்தங்குடி துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் பாபு (45). திமுக நகரசெயற்குழு உறுப்பினரான இவர் மீது நல்லாசிரியர் நீலகண்டன் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் நேற்று (23.07.20) இரவு 10 மணிக்கு கடைவீதிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது வீட்டின் அருகே உள்ள குளக்கரையில் மறைந்திருந்த, அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று பாபுவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது.

இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து பாபுவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வு பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இன்று(24.07.20) பாபுவின் கூட்டாளிகளான அரியலூர் மாவட்டம் பாப்பாகுடி கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் (33), மயிலாடுதுறை பகுதிகளைச் சேர்ந்த சேந்தங்குடி மாதவன் (26), திருவழுந்தூர் பாரதிராஜா (28), மாப்படுகை வெங்கடேஷ் (21), ஆகிய நான்கு பேரும் அரியலூர் மாவட்டம் செந்துறை மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கம் முன்னிலையில் சரணடைந்தனர்.

பின்னர் அவர்கள் நான்கு பேரையும் ஏழு நாள்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து செந்துறை போலீசார் அவர்களை போலீஸ் வாகனத்தில் திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க:சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் ஐந்து சவரன் தங்கச் சங்கிலி பறிப்பு!

ABOUT THE AUTHOR

...view details