அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகேயுள்ள தழுதாயமேடு பகுதியில், விராலிமலையிலிருந்து ஜெயங்கொண்டம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த மணல் லாரி மீது பெங்களூருவிலிருந்து வந்துகொண்டிருந்த கார் மோதி விபத்துக்குள்ளானது.
காரும் லாரியும் மோதி விபத்து - அரியலூரில் 3 பேர் மரணம் - அரியலூர் மீன்சுருட்டி
அரியலூர்: மீன்சுருட்டி அருகே மணல் ஏற்றிவந்த லாரி மீது கார் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர். நான்கு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
ariyalur
இதில், அப்பளம் போல் நொறுங்கிய காரிலிருந்த ஏழு பேரில் ஆனந்த குமார், அனில் குமார், நாகேந்திரன் ஆகிய மூவரும் உடல் நசுங்கி சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற நான்கு பேரும் படுகாயம் அடைந்து, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து மீன்சுருட்டி காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.