தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடகு கடையில் 100 பவுன் தங்க நகை திருட்டு!

அரியலூர்: திருமழபாடி கிராமத்தில் உள்ள தங்க நகை அடகு கடையின் லாக்கரில் வைத்திருந்த 100 பவுன் நகையை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.

100சவரன் நகை திருடப்பட்ட அடகு கடை

By

Published : Nov 24, 2019, 11:32 PM IST

அரியலூர் மாவட்டம் திருமழபாடி கிராமத்தில் தஞ்சாவூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவக்குமார் என்பவர் ஓட்டு கட்டிடத்தில் சுந்தராம்பிகை நகை அடகு கடையை 25 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

இவருக்கு சுண்டக்குடி, கோவிலூர், புள்ளம்பாடி ஆகிய இடங்களிலும் நகை அடகு கடைகள் உள்ளன. கடைகளை பொரும்பாலும் வேலை ஆட்கள் மட்டுமே கவனித்து வருவது வழக்கம்.

இந்நிலையில், நேற்றிரவு கடையின் பூட்டை உடைத்த அடையாளம் தெரியாத நபர்கள் கடை லாக்கரில் வைத்திருந்த சுமார் 100 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

100 பவுன் நகை திருடப்பட்ட அடகு கடை

கடைக்கு அருகிலிருந்த வீட்டின் உரிமையாளர், வெளியே சத்தம் கேட்டு வந்து பார்த்தபோது கடைக்கு அருகே அடையாளம் தெரியாத நபர்கள் அமர்ந்திருப்பதைப் பார்த்து கூச்சலிட்டுள்ளார் உடனே அவர்கள் தப்பியோடியுள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கடையில் கண்காணிப்புக் கேமரா இல்லாத காரணத்தினால் குற்றவாளிகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும், மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள்களை வரவழைத்து அதனடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் 15 சவரன் நகை கொள்ளை - கொள்ளையர்களுக்கு வலைவீச்சு!

ABOUT THE AUTHOR

...view details