அரியலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை காக்கவும், அதனை மேம்படுத்தவும் சோலைவனம் என்ற அமைப்பின் மூலம் கடந்த ஒரு மாதமாக ஒரு லட்சம் பனை விதைகள் சேகரிக்கும் பணி நடைபெற்றது.
50 கிராமங்கள்..1 லட்சம் பனை விதைகள்.. நடவு செய்யும் பணி தொடக்கம்!
அரியலூர்: ஒரே நாளில் 50 கிராமங்களில் பனை விதைகளை நடவு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார்.
இதையடுத்து, இன்று ஒரே நாளில் அரியலூர், ஒட்டக்கோவில், பொய்யாதநல்லூர்,
ஆனந்தவாடி, ஆயன்ஆத்தூர், கல்லமேடு, சாலைக்குறிச்சி, குமுழியம், சிறுகடம்பூர் உள்ளிட்ட 50 கிராமங்ளில் பனை விதைகள் விதைக்கப்பட்டன.
அரியலூரில் நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் ரத்னா, காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு பனை விதைகளை நட்டனர். இந்த விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பனை விதைகளிலானப் பொருள்களை இந்த அமைப்பினர் இலவசமாக கொடுத்தனர். இன்று ஓரே நாளில் 1 லட்சம் பனை விதைகளை நடும் நோக்கில் சுமாராக ஆயிரத்து 200 இளைஞர்கள் களம் இறங்கியுள்ளனர்.