உலகக்கோப்பை ஹாக்கித் தொடர் நான்கு வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்து வரும் 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை இந்தியாவில் நடைபெறுமென உலக ஹாக்கி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் நிர்வாகக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவுக்கு 2023ஆம் ஆண்டுக்கான ஹாக்கி உலகக்கோப்பைத் தொடரை நடத்தும் வாய்ப்பை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு கூறுகையில், இந்தத் தொடரானது 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதியிலிருந்து 29ஆம் தேதி வரை நடக்க உள்ளதாகவும், போட்டி நடக்கும் இடத்தை இந்தியா ஹாக்கி கூட்டமைப்பே முடிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், பெண்களுக்கான ஹாக்கி உலகக்கோப்பைத் தொடர் 2022ஆம் ஆண்டு ஜூலை ஒன்று முதல் ஜூலை 17ஆம் தேதி வரை நடைபெறுமெனவும், இந்தத் தொடரை இந்தியாவுடன் இணைந்து ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து நாடுகளும் நடத்தவுள்ளது எனவும் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: நிஜத்தில் ஒரு 'பிகில்' கோச்!- மகளிர் ஹாக்கியில் கில்லி டீம்!