டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 41 வருடங்களுக்குப் பிறகு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சியினர் உள்ளிட்டப் பல்வேறு தரப்பினர் இந்திய அணிக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய ஹாக்கி அணி வீரர் வருண் குமாரின் குடும்பத்தினர் தொலைக்காட்சி முன்பு அமர்ந்தபடி பதக்கம் வென்ற போட்டியின் இறுதி நிமிடங்களை கைதட்டிப் பார்த்து ரசித்தனர்.