ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32ஆவது ஒலிம்பிக் போட்டிகள் நேற்றுடன் (ஆகஸ்ட்.08) முடிவடைந்தது. இந்த போட்டியில் இந்தியா உள்பட பல நாடுகளிலிருந்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
இதில் அமெரிக்கா 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலத்துடன் மொத்தம் 113 பதக்கங்கள் வென்று பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. 38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலத்துடன் மொத்தம் 88 பதக்கங்களுடன் சீனா இரண்டாவது இடமும், 27 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலத்துடன் மொத்தம் 58 பதக்கங்களுடன் ஜப்பான் 3ஆவது இடத்தில் உள்ளது.
இதில் இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலத்துடன் மொத்தம் 7 பதக்கங்களுடன் 48ஆவது இடத்தில் உள்ளது. இந்தியா 124 போட்டியாளர்கள் உள்பட 228 பேர் அடங்கிய குழுவை ஒலிம்பிக் போட்டியில் அனுப்பியது.
இந்நிலையில், பதக்கம் வென்ற இந்தியர்களை இந்திய அமெரிக்க தூதரகம் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளது. அதில், "ஒலிம்பிக் போட்டிகள் உலகை ஒன்றிணைக்கிறது. உங்களின் அற்புதமான செயல்திறனால் ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வென்று இருக்கிறீர்கள். டீம் இந்தியாவிற்கு வாழ்த்துகள்.