தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கோலாகலமாகத் தொடங்கியது டோக்கியோ ஒலிம்பிக் - TokyoOlympics2020 opening ceremony

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கியது.

TokyoOlympics2020
ஒலிம்பிக்

By

Published : Jul 23, 2021, 5:24 PM IST

Updated : Jul 23, 2021, 5:48 PM IST

கடந்தாண்டு நடக்க வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகள் கரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இந்தாண்டு நடைபெறுகிறது. இந்நிலையில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்திய நேரப்படி இன்று மாலை தொடங்கியது.

ஒலிம்பிக் தீபம் தொடர் ஓட்டமாக மைதானத்திற்குள் கொண்டுவரப்பட்டு தீபம் ஏற்றப்பட்டதும் ஒலிம்பிக் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.

டோக்கியோ ஒலிம்பிக் 2020

கண்கவர் கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள், லேசர் ட்ரோன் ஷோ, வாணவேடிக்கைகள் என்று பிரமாண்டமாக விழா நடைபெறுகிறது. இந்தாண்டு நிகழ்ச்சியின் தீம் ஆக 'மூவிங் பார்வர்ட்' (moving forward) முடிவுசெய்யப்பட்டுள்ளது. தொடக்க விழாவில், இந்தியா சார்பில் 19 வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.

கோலாகலமாகத் தொடங்கியது டோக்கியோ ஒலிம்பிக்

விழாவின் முக்கிய அம்சமாக 204 நாடுகளின் அணியினரும் தங்களது தேசியக்கொடியுடன் மிடுக்காக அணிவகுத்துச் செல்கின்றனர். இந்திய அணிக்குத் தலைமைதாங்கி தேசியக்கொடியை மேரிகோம், மன்பிரீத்சிங் ஆகியோர் ஏந்திச்சென்றனர்.

இந்தியக் கொடியுடன் மேரிகோம், மன்பிரீத்சிங்

ரசிகர்கள் கூட்டத்தால் எப்போது அதிரும் ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சி, கரோனா கட்டுப்பாடுகளால் ரசிகர்கள் இன்றி நடைபெறுகிறது.

வாண வேடிக்கைகளுடன் தொடங்கிய ஒலிம்பிக்

இந்தியத் தரப்பில் ஒலிம்பிக்கில் 125 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:டோக்கியோ ஒலிம்பிக்: தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

Last Updated : Jul 23, 2021, 5:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details