தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

PARALYMPIC SHOOTING: இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றார் ரூபினா ஃபிரான்சிஸ்

பாரா ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை ரூபினா ஃபிரான்சிஸ் தகுதிச்சுற்றில் ஏழாவது இடத்தைப் பிடித்து, இறுதிச்சுற்றுக்குத் தகுதிப்பெற்றுள்ளார்.

ரூபினா பிரான்சிஸ், Rubina Francis, PARALYMPIC SHOOTING
PARALYMPIC SHOOTING

By

Published : Aug 31, 2021, 7:59 AM IST

டோக்கியோ: மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கியது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதிவரை நடைபெற உள்ள இத்தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், பாரா ஒலிம்பிக் மகளிர் துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்ஹெச்-1 பிரிவின் தகுதிச்சுற்றுப் போட்டி இன்று (ஆகஸ்ட் 31) நடைபெற்றது. இதில், இந்திய வீராங்கனை ரூபினா ஃபிரான்சிஸ் பங்கேற்றார். இப்போட்டியில் முதல் எட்டு இடங்களைப் பிடிக்கும் வீரர்கள், அடுத்த இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறுவார்கள்.

ஏழாவது இடம்

போட்டியில் ரூபினாவுக்கு கொடுக்கப்பட்ட ஆறு வாய்ப்புகளில் முறையே 91, 96, 95, 92, 93, 93 என மொத்தமாக 600 புள்ளிகளுக்கு, 560 புள்ளிகளைப் பெற்று ஏழாவது இடத்தைப் பிடித்தார். இதன்மூலம், அவர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இதையடுத்து, துப்பாக்கிச் சுடுதல் இறுதிப்போட்டி, தொடர்ந்து இன்று காலை 8.30 மணியளவில் தொடங்குகிறது.

இதையும் படிங்க: PARALYMPICS: இந்தியாவுக்கு அடுத்த தங்கம்

ABOUT THE AUTHOR

...view details