டோக்கியோ: பாரா ஒலிம்பிக் 2020 போட்டிகள் நேற்று (ஆகஸ்ட் 24) ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்கியது. இந்தப் போட்டிகளில், இரண்டாவது நாளான இன்று பெண்கள் தனிநபர் சி-3 டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில், சீனாவின் கியான் லி-க்கு எதிராக இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை சோனல்பென் மதுபாய் படேல் களமிறங்கினார்.
போட்டியின் ஆரம்பம் முதலே, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கியான் லி (9-11, 11-3, 15-17, 11-7, 11-4) ஐந்து செட் கணக்கில் வெற்றிபெற்றார். அதன்படி, மொத்தமாக 3-2 என்ற கணக்கில் சோனல்பென் மதுபாய் படேல் தோல்வியடைந்தார்.