டோக்கியோ: மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கியது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதிவரை நடைபெற உள்ள தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் ஒன்பது விதமான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், பாரா டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் சி-4 பிரிவில் ரவுண்ட் ஆஃப் 16 போட்டிகள் இன்று (ஆக. 27) நடைபெற்றன. இதில், இந்திய வீராங்கனை பவினாபென் படேல், பிரேசில் வீராங்கனை ஜாய்ஸ் டி ஒலிவீரா உடன் மோதினார்.
போட்டுத்தாக்கிய பவினாபென்
ஆட்டத்தின் தொடக்கத்தில் ஒலிவீரா புள்ளிகளை பெற்று ஆதிக்கம் செலுத்தினார். அதன்பின், சுதாரித்துக் கொண்ட பவினாபென், ஆக்ரோஷமாக விளையாடி முதல் செட்டை 12-10 என்ற கணக்கில் வென்றார்.
இதையடுத்து, இரண்டாவது, மூன்றாவது செட்டுகளை முறையே 13-11, 11-6 என்ற கணக்கில் வென்று, பவினாபென் பிரேசில் வீராங்கனையை தோற்கடித்தார். இதன்மூலம், பவினாபென் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.