தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

TOKYO PARALYMPICS: இந்தியாவுக்கு 19 பதக்கங்கள்; 24ஆவது இடம்! - இந்தியாவுக்கு 19 பதக்கங்கள்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் தொடரை இந்தியா 19 பதக்கங்களுடன் 24ஆவது இடத்தோடு நிறைவு செய்துள்ளது.

TOKYO PARALYMPICS
TOKYO PARALYMPICS

By

Published : Sep 5, 2021, 5:17 PM IST

டோக்கியோ: பாரா ஒலிம்பிக் தொடர் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் (செப். 5) நிறைவடைகிறது. இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டிகள் இன்று காலையுடன் நிறைவுபெற்றது.

இத்தொடரில் இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள், 9 விதமான விளையாட்டுகளில் பங்கேற்றனர். இதுவே, பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவிலிருந்து அதிக வீரர்கள் கலந்துகொண்ட தொடராகும். முன்னதாக, கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிலிருந்து 19 பேர் பங்கேற்றிருந்தனர்.

2016 வரை 12தான்

இந்தியா முதன்முறையாக 1968ஆம் ஆண்டுதான் பாரா ஒலிம்பிக் தொடரில் பங்கேற்றது. 1968-இல் இருந்து 2016வரை இந்தியா, மொத்தமாக 12 பதக்கங்களே பெற்றிருந்தது.

இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் மட்டும் இந்தியா, 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கங்களை பெற்று அசத்தியுள்ளது. இதையடுத்து, இந்தியா பதக்கப் பட்டியலில் 24ஆவது இடத்தோடு நிறைவு செய்துள்ளது.

தங்கம் வென்றவர்கள்

  • அவனி லெகாரா - மகளிர் துப்பாக்கிச்சுடுதல் 10 மீ. ஏர் ரைஃபிள் எஸ்ஹெச்-1 பிரிவு
  • சுமித் ஆன்டில் - ஆடவர் ஈட்டி எறிதல் எஃப்-64
  • மனிஷ் நார்வால் - ஆடவர் துப்பாக்கிச்சுடுதல் 50 மீ. பிஸ்டல் எஸ்ஹெச்-1
  • பிரமோத் பகத் - ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் எஸ்எல்-3
  • கிருஷ்ணா நாகர் - ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் எஸ்ஹெச்-6

வெள்ளி வென்றவர்கள்

  • பவினாபென் படேல் - மகளிர் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் சி-4 பிரிவு
  • சிங்ராஜ் அடானா - கலப்பு துப்பாக்கிச் சுடுதல் 50 மீ. பிஸ்டல் எஸ்ஹெச்-1
  • யோகேஷ் கத்துனியா - ஆடவர் வட்டு எறிதல் எஃப்-56
  • நிஷாத் குமார் - ஆடவர் உயரம் தாண்டுதல் டி-47
  • மாரியப்பன் தங்கவேலு - ஆடவர் உயரம் தாண்டுதல் டி-63
  • பிரவீன் குமார் - ஆடவர் உயரம் தாண்டுதல் டி-64
  • தேவேந்திர ஜஜாரியா - ஆடவர் ஈட்டி எறிதல் எ-ப்-46
  • சுஹாஸ் யாதிராஜ் - ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் எஸ்எல்-4

வெண்கலம் வென்றவர்கள்

  • அவனி லெகாரா - மகளிர் துப்பாக்கிச் சுடுதல் 50 மீ. ரைபிள் 3பி எஸ்ஹெச்-1
  • ஹர்விந்தர் சிங் - ஆடவர் வில்வித்தை ஒற்றையர் ரிகர்வ்
  • சரத் குமார் - ஆடவர் உயரம் தாண்டுதல் டி-63
  • சுந்தர் சிங் குர்ஜார் - ஆடவர் ஈட்டி எறிதல் எஃப்-46
  • மனோஜ் சர்கார் - ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் எஸ்எல்-3
  • சிங்ராஜ் அடானா - ஆடவர் துப்பாக்கிச்சுடுதல் 10 மீ. ஏர் பிஸ்டல் எஸ்ஹெச்-1

சாதனை படைத்த இந்தியர்கள்:

  • சுமித் ஆன்டில் - ஈட்டி எறிதலில் உலக சாதனை
  • அவனி லெகாரா - உலக சாதனையை சமன் செய்தார்
  • மனீஷ் நார்வால் - பாரா ஒலிம்பிக்கில் அதிக புள்ளிகள் பெற்று சாதனை
  • நிஷாத் குமார் - உயரம் தாண்டுதல் டி-47இல் ஆசிய சாதனை
  • பிரவீன் குமார் - உயரம் தாண்டுதல் டி-64இல் ஆசிய சாதனை

இந்தியா பெற்றுள்ள 19 பதக்கங்களில் அதிகபட்சமாக, துப்பாக்கிச்சுடுதல் விளையாட்டில் 5 பதக்கமும், உயரம் தாண்டுதலில் 4 பதக்கமும், பேட்மிண்டனில் 4 பதக்கமும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரவி சாஸ்திரிக்கு கரோனா தொற்று; தனிமையில் யார் யார்?

ABOUT THE AUTHOR

...view details