தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

PARALYMICS TABLE TENNIS: பவினா - சோனால் ஜோடி காலிறுதியில் ஏமாற்றம்

பாரா ஒலிம்பிக் மகளிர் இரட்டையர் டேபிள் டென்னிஸ் காலிறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனைகள் பவினாபென் படேல், சோனல் படேல் ஆகியோர் சீன வீராங்கனைகளிடம் தோல்வியுற்று வெளியேறினர்.

பவினா - சோனால்
பவினா - சோனால்

By

Published : Aug 31, 2021, 3:10 PM IST

டோக்கியோ: மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கியது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதிவரை நடைபெறும் இத்தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், மகளிர் இரட்டையர் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவின் (Class 4-5) காலிறுதிப் போட்டி இன்று (ஆக. 31) நடைபெற்றது. இப்போட்டியில், சீன வீராங்கனைகள் யிங் ஜோ, ஜாங் பியன் ஆகியோருடன் இந்திய வீராங்கனைகள் பவினாபென் படேல், சோனல் படேல் ஆகியோர் மோதினர்.

காலிறுதியோடு வெளியேற்றம்

சீன வீராங்கனைகள் 11-4, 11-4, 11-2 என்ற செட் கணக்கில் இந்திய வீராங்கனைகளை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். இதன்மூலம், இந்தியா வீராங்கனைகள் காலிறுதிச்சுற்றோடு வெளியேறினர்.

முன்னதாக, பவினாபென் படேல் நேற்று முன்தினம் (ஆக. 29) நடைபெற்ற மகளிர் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் சி-4 பிரிவின் இறுதிப்போட்டியில் தோல்வியைடந்து, வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதுதான் இந்தியா டேபிள் டென்னிஸில் பெறும் முதல் ஒலிம்பிக் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: PARALYMPIC SHOOTING: சீறினார் சிங்ராஜ்; வென்றார் வெண்கலம்!

ABOUT THE AUTHOR

...view details