டோக்கியோ:ஒலிம்பிக் தொடரின் மல்யுத்தம் ஆடவர் ஃப்ரீ-ஸ்டைல் 86 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதிப் போட்டிகள் இன்று (ஆக.4) நடைபெற்றன. இதில், இந்தியாவின் தீபக் புனியா, அமெரிக்க வீரர் டேவிட் டெய்லர் உடன் மோதினார். இதற்கு முன், தீபக் புனியா காலிறுதிப் போட்டியில் சீன வீரரை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்துஅரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார்.
ஆதிக்கத்தால் வீழ்ச்சி
இந்நிலையில், அரையிறுதிப் போட்டியின் ஆரம்பம் முதலே புனியா மீது ஆதிக்கம் செலுத்திய டெய்லர் மிக எளிதாக போட்டியை வென்றார். அரையிறுதியில் தோல்வியுற்ற தீபக் புனியா வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்பார்.