தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஒலிம்பிக்: அரையிறுதிக்கு முன்னேறி இந்திய மகளிர் ஹாக்கி அணி வரலாற்றுச் சாதனை! - அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் ஹாக்கி அணி

ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக அரையிறுதிக்குள் நுழைந்து இந்திய மகளிர் ஹாக்கி அணி சாதனை படைத்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்
டோக்கியோ ஒலிம்பிக்

By

Published : Aug 2, 2021, 10:42 AM IST

டோக்கியோ ஒலிம்பிக்கில் காலிறுதி சுற்றில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி முன்னேறி அசத்தியுள்ளது. இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக அரையிறுதிக்குள் நுழைந்து இந்திய மகளிர் ஹாக்கி அணி சாதனை படைத்துள்ளது.

ஆட்டத்தின் 22ஆவது நிமிடத்தில் பெனால்டி கார்னரில் இருந்து குர்ஜித் கவுர் அடித்த கோலே இந்தியாவை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றுள்ளது.

இதன் மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு மகளிர் ஹாக்கி அணி முன்னேறி அசத்தியுள்ளது.

இதையும் படிங்க: இந்தியா திரும்பியதும் பிரதமருடன் ஐஸ்கிரீம் சாப்பிடவுள்ள பி.வி. சிந்து

ABOUT THE AUTHOR

...view details