டெல்லி : டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை 1-0 என்ற புள்ளிகணக்கில் வீழ்த்தியது.
ஒலிம்பிக்கை பொறுத்தவரை இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறுவது இதுவே முதல் முறை.
இந்த வெற்றி குறித்து அணியின் பயிற்சியாளர் ஸ்ஜோர்ட் மரிஜ்னே (Sjoerd Marijne) ட்வீட் ஒன்றை செய்திருந்தார்.
அதில், “மன்னிக்கவும், நாங்கள் மீண்டும் தாமதமாக வருவோம் (அதாவது வெற்றியுடன் திரும்புவோம்)” என்ற பொருளில் ஹாக்கி அணியின் புகைப்படம் ஒன்றை பதிவேற்றியிருந்தார்.
இந்த ட்விட்டுக்கு ரீ-ட்வீட் செய்துள்ள ரசிகர்கள் ஷாருக்கான் நடிப்பில் வெளியான சக்தே இந்தியாவின் கபீர் கான் புகைப்படங்களை பதிவேற்றியிருந்தனர்.
மேலும் ஸ்ஜோர்ட் மரிஜ்னேவை ரியல் கபீர் கான் எனவும் புகழ்ந்திருந்தனர். பிரபல பாலிவுட் படமான சக்தே இந்தியா படத்தில் ஷாருக்கான் மகளிர் ஹாக்கி அணிக்கு பயிற்சியளிக்கும் கபீர் கான் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய புகழை பெற்றுகொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு ‘chak de india' நடிகை வாழ்த்து