டோக்கியோ : டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகின்றன. இதில் மகளிர் பளு தூக்குதல் 49 கிலோ எடை பிரிவில் மீராபாய் சானு வெள்ளி வென்று அசத்தினார்.
இந்தப் போட்டியில் மீராபாய் சானு 84 மற்றும் 87 கிலோ எடைகளை வெற்றிகரமாக தூக்கினார். மொத்தமாக பார்க்கையில் மீராபாய் சானு 202 கிலோ தூக்கி வெள்ளி பதக்கம் வென்றார்.
இதற்கிடையில் சீனாவின் ஸிஹூயி 94 கிலோவை வெற்றிகரமாக தூக்கி ஒலிம்பிக்கில் புதிய சாதனை படைத்தார். அவர் மொத்தமாக 210 கிலோ வரை தூக்கி தங்கத்தை தனதாக்கினார். மூன்றாவது இடம் வந்த இந்தோனேசிய வீராங்கனை அய்ஷாவுக்கு கிடைத்தது. அவர் மொத்தமாக 194 கிலோ எடை தூக்கியிருந்தார்.
இந்த நிலையில் மீரா பாய் சானுவை விட 8 கிலோ அதிகம் தூக்கியிருந்த சீன வீராங்கனை ஸிஹூயி ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளார். இதனால் மீராபாய் சானு வென்ற வெள்ளி தங்கமாக மின்ன வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதையும் படிங்க : Tokyo Olympics: வெள்ளி வென்றார் மீராபாய் சானு!