தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தஜிந்தர்பால் சிங் தூர் வெறியேற்றம்; தடகளத்தில் தொடரும் ஏமாற்றம்

டோக்கியோ ஒலிம்பிக் குண்டெறிதலில் இந்தியாவின் தஜிந்தர்பால் சிங் தூர் 13ஆவது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதிபெறாமல் வெளியேறினார்.

தஜிந்தர்பால் சிங் தூர், Tajinderpal Singh Toor
தஜிந்தர்பால் சிங் தூர்

By

Published : Aug 3, 2021, 6:16 PM IST

டோக்கியோ: ஒலிம்பிக் தொடரின் ஆடவர் குண்டு எறிதல் தகுதிச்சுற்றுப் போட்டி இன்று (ஆக.2) நடைபெற்றது. ஆசிய அளவில் சாதனை புரிந்த இந்தியாவின் தஜிந்தர்பால் சிங் தூர் 'ஏ' பிரிவிற்கான தகுதிச்சுற்றில் பங்கேற்றார். இந்த பிரிவில் மொத்தம் 16 பேர் பங்கேற்றனர்.

இப்போட்டியில் அனைவருக்கும் மூன்று வாய்ப்புகள் கொடுக்கப்பட்ட நிலையில், தஜிந்தர்பால் முதல் வாய்ப்பில் 19.99 மீட்டர் துரத்திற்கு குண்டை எறிந்தார். மீதமுள்ள இரண்டு வாய்ப்புகளிலும் தவறாக வீசி 13ஆவது இடத்தை பிடித்தார்.

இரண்டு ஃபவுல்

இறுதிச்சுற்றுக்கு செல்ல குறைந்தபட்சம் 21.20 மீட்டர் தூரம் குண்டை வீசியிருக்க வேண்டும் அல்லது முதல் 12 இடங்களைப் பிடித்திருக்க வேண்டும் என்பதால் இந்திய வீரர் தஜிந்தர்பால் முதல் சுற்றோடு வெளியேறி ஏமாற்றமளித்தார்.

தடகளப் போட்டிகளான ஓட்டப்பந்தயத்தில் டூட்டி சந்த், வட்டு எறிதலில் கமல்பிரீத் கவுர், ஈட்டி எறிதலில் அன்னு ராணி ஆகிய இந்தியர்கள் டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாமல் வெளியேறியது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க: உற்சாகமாக நாடு திரும்பினார் சிந்து!

ABOUT THE AUTHOR

...view details