டோக்கியோ: ஒலிம்பிக் தொடரின் ஆண்கள் 200 மீட்டர் நீச்சல் பட்டர்ஃபிளை பிரிவிற்கான போட்டிகள் இன்று (ஜூலை 26) நடைபெற்றது.
இதில் ஹீட் 2 போட்டியில், இந்தியா சார்பில் சஜன் பிரகாஷ் பங்கேற்றார். அப்போட்டியில் 200 மீட்டர் இலக்கை 1:57.22 வினாடிகளில் கடந்து, அவர் ஒட்டுமொத்தமாக 24ஆவது இடத்தை பிடித்தார். முதல் 16 இடங்களுக்குள் அவர் வந்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில் இந்த சுற்றோடு வெளியேறி ஏமாற்றளித்தார்.