தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டோக்கியோ ஒலிம்பிக்: 3 போட்டிகளிலும் இந்தியா தோல்வி - மல்யுத்தப் போட்டியில் இந்தியா

டோக்கியோ: ஒலிம்பிக் தொடரில் இன்று (ஆக. 3) ஈட்டி எறிதல், ஆடவர் ஹாக்கிப் போட்டிகளைத் தொடர்ந்து மல்யுத்தப் போட்டியிலும் இந்தியா தோல்வியைத் தழுவியது.

சோனம் மாலிக்
சோனம் மாலிக்

By

Published : Aug 3, 2021, 9:53 AM IST

டோக்கியோ:ஒலிம்பிக் தொடரில் 11ஆவது நாளான இன்று (ஆக. 3) விறுவிறுப்பாகப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. அதில், இந்திய வீரர், வீராங்கனைகள் ஆடவர் ஹாக்கி, ஈட்டி எறிதல், மல்யுத்தப் போட்டிகளில் கலந்துகொண்டனர்.

முன்னதாக, மகளிர் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் அன்னு ராணி தோல்வியடைந்தார். ஆடவர் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி பெல்ஜியத்திடம் 5-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

இதனிடையே, மல்யுத்தப் போட்டி 62 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சோனம் மாலிக் பதக்கம் வெல்வார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சோனம் மாலிக் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்தார். இப்போட்டி காலை 9.15 மணிக்குத் தொடங்கியது.

இதையும் படிங்க:டோக்கியோ ஒலிம்பிக் - இந்தியா ஹாக்கி அணி போராடி தோல்வி

ABOUT THE AUTHOR

...view details