டோக்கியோ:ஒலிம்பிக் தொடரின் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி இன்று (ஆக.7) நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா வீரர் நீரஜ் சோப்ரா உள்பட 12 வீரர்கள் பங்கேற்றனர். முதலில் கொடுக்கப்படும் மூன்று வாய்ப்புகளில் முதல் எட்டு இடங்களைப் பிடிப்பவர்ளுக்கு அடுத்த மூன்று வாய்ப்புகள் கொடுக்கப்படும்.
இதில், நீரஜ் சோப்ரா தனது முதல் வாய்ப்பில் 87.03 மீட்டர், இரண்டாவது வாய்ப்பில் 87.58 மீட்டர் தூரத்திற்கு வீசி முன்னிலை பெற்றார். அவர் வீசிய தூரத்தை மற்ற வீரர்கள் எட்டமுடியவில்லை. இதன்மூலம், நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கத்தை வென்றார்.
121 ஆண்டுகளுக்கு பின்...
முன்னதாக 1900 பாரிஸ் ஒலிம்பிக்கில், இந்தியா சார்பாக விளையாடிய நார்மன் பிரிட்சார்ட் 200 மீட்டர் தடை ஓட்டப்பந்தயத்திலும், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் வெள்ளி வென்றிருந்தார். 121 ஆண்டுகளுக்கு பிறகு, நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ளது குறிப்பிடதக்கது.
இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ரா
முதல் வாய்ப்பு - 87.03 மீட்டர்