2020 ஒலிம்பிக் போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. போட்டியின் ஏழாவது நாளான இன்றும் (ஜூன் 28) இந்தியா பதக்கம் ஏதும் வெல்லவில்லை.
தற்போது பதக்கப் பட்டியலில், ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாடான ஜப்பான் அணி 13 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என 22 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. சீனா 12 தங்கம், அமெரிக்கா 11 தங்கம் என முறையே இரண்டாம், மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளன. இந்தியா அணி 1 வெள்ளிப் பதக்கத்துடன் 43ஆவது இடத்தில் உள்ளது.