டோக்கியோ ஒலிம்பிக்கில் 69 கிலோ எடை பிரிவுக்கான பெண்கள் குத்துச்சண்டையின் அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை லவ்லினா உலக சாம்பியனான துருக்கி நாட்டைச் சேர்ந்த புஸ்னேஸ் சுர்மேனேலியை எதிர்கொண்டார்.
குத்துச்சண்டை: வெண்கலம் வென்றார் லவ்லினா - tokyo
டோக்கியோ: ஒலிம்பிக் பெண்கள் குத்துச்சண்டையில் லவ்லினா வெண்கலப் பதக்கம் வென்றார்.
லவ்லினா
போட்டியின் முதல் சுற்றில் துருக்கி வீராங்கனை சிறப்பாக விளையாட இரண்டாவது சுற்றில் லவ்லினா எழுச்சி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அடுத்து நடந்த இரண்டு சுற்றுகளிலும் துருக்கி வீராங்கனை மீது லவ்லினாவால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. இதன் காரணமாக குத்துச்சண்டை போட்டியில் இறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை இழந்து வெண்கலப் பதக்கத்தை லவ்லினா வென்றார்.