தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஈட்டி எறிதல் - இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நீரஜ் சோப்ரா - tokyo olympics javelin throw

ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றுள்ளார்.

நீரஜ் சோப்ரா
நீரஜ் சோப்ரா

By

Published : Aug 4, 2021, 7:04 AM IST

Updated : Aug 4, 2021, 7:44 AM IST

டோக்கியோ : 32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி இன்று காலை நடைபெற்றது. குருப் எ பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.

இதில் தனது முதல் வாய்ப்பிலேயே 86.65 மீட்டர் தூரம் எறிந்தார். இதன் மூலம் நீரஜ் சோப்ரா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இதேபோல் பின்லாந்து வீரர் லாஜி எட்டிலாடாலோ (Lassi Etelatalo) என்ற வீரரும் முதல் வாய்ப்பிலேயே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். குருப் பி பிரிவுக்கான போட்டிகள் இன்று நடைபெறுகிறது. இறுதிப்போட்டி ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடைபெறுகிறது.

கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற மகளிர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியாவின் அன்னு ராணி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :Tokyo Olympics 13ஆவது நாள்: இந்தியாவிற்கான முக்கியப் போட்டிகள்!

Last Updated : Aug 4, 2021, 7:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details