டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதித்துள்ள 23 வயதான இளைஞர் நீரஜ் சோப்ரா குறித்து பார்க்கலாம்.
Neeraj Chopra
By
Published : Aug 7, 2021, 5:39 PM IST
|
Updated : Aug 7, 2021, 5:46 PM IST
ஹைதராபாத் : டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவுசெய்துள்ள நீரஜ் சோப்ரா ஹரியானா மாநிலம் பானிபட் நகரைச் சேர்ந்தவர்.
சண்டிகர் தேவ் கல்லூரியில் படிப்பை முடித்த நீரஜ் சோப்ரா, இந்திய ராணுவத்தில் சுபேதார் ஆக 2016ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இவர் 2016 ஆசிய விளையாட்டு போட்டியில் 82.23 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து புதிய சாதனை படைத்தார்.
தொடர்ந்து 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 85.23 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்றார். இந்தச் சாதனையை 2018ஆம் ஆண்டு தோகா டைமண்ட் லீக் போட்டியில் 87.43 மீட்டர் தூரம் ஈட்டி வீசி முறியடித்தார்.
நீரஜ் சோப்ரா
தற்போது இவர் ஜெர்மனியை சேர்ந்த கிளாஸ் பார்டோனீட்ஸ் (Klaus Bartonietz) என்பவரிடம் ஈட்டி எறிதல் பயிற்சி பெற்றுவருகிறார். ஈட்டி எறிதலில் இவரின் சாதனை 88.07 மீட்டர் ஆகும்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இவரின் சாதனை 87.58 மீட்டர் ஆகும். நீரஜ் சோப்ராவுக்கு ஒரு ஸ்டைல் உண்டு. அவர் தனது ஒவ்வொரு போட்டியிலும் முந்தைய சாதனையை முறியடிப்பார்.