2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று, டேபிள் டென்னிஸ், டென்னிஸ், ஆண்கள் ஹாக்கி , பேட்மின்ட்டன் உள்ளிட்ட போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டனர்.
இரண்டாம் நாள் முடிவில் பதக்க பட்டியலில் இந்தியா 12ஆவது இடத்தில் உள்ளது. குறிப்பாக மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் எடை பிரிவில் மீரா பாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார்.