தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி: ஜப்பானை வீழ்த்திய இந்தியா! - ஜப்பானை வீழ்த்திய இந்தியா

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் ஜப்பான் அணியை 5-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியுள்ளது.

Tokyo Olympics
ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி

By

Published : Jul 30, 2021, 6:36 PM IST

32ஆவது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில், ஆடவர் ஹாக்கி பிரிவில் லீக் சுற்றின் 27ஆவது போட்டியில் ஜப்பான் அணியை, இந்திய அணி இன்று எதிர்கொண்டது.

ஆரம்பம் முதலே இரண்டு அணிகளும் கோல் அடிக்க தொடங்கினர். இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங், குர்ஜந்த் சிங் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். அதேபோல, ஜப்பானை சேர்ந்த டனகா, ஹுடனபி ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

இரு அணிகளும் தலா இரண்டு கோல் கணக்குடன் சமமாக இருந்ததால், ஆட்டம் விறுவிறுப்பாக மாறியது. இந்திய வீரர்கள் அடுத்ததடுத்து கோல் அடித்து ஜப்பான் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தனர். போட்டி நேர முடிவில், ஜப்பானை 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

ஏற்கனவே காலிறுதிக்கு இந்திய ஹாக்கி அணி தகுதி பெற்ற நிலையில், லீக் சுற்றின் கடைசி ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து

ABOUT THE AUTHOR

...view details