தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இறுதிப்போட்டியில் ஏமாற்றமளித்தார் கமல்பிரீத் கவுர் - ஒலிம்பிக் தொடர்

ஒலிம்பிக் தொடரின் வட்டெறிதல் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் ஆறாவது இடத்தை பிடித்து பதக்கமின்றி வெளியேறினார்.

கமல்பிரீத் கவுர்
கமல்பிரீத் கவுர்

By

Published : Aug 2, 2021, 7:27 PM IST

டோக்கியோ:ஒலிம்பிக் தொடரின் மகளிர் வட்டெறிதல் இறுதிப்போட்டி இன்று (ஆக.2) நடைபெற்றது. இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் உள்பட 12 வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இதில், கமல்பிரீத் கவுர் கொடுக்கப்பட்ட ஆறு வாய்ப்புகளில் அதிகபட்சமாக 63.70 மீட்டர் துரத்திற்கு வட்டெறிந்து ஆறாவது இடத்தை பிடித்தார். இப்போட்டியில், அமெரிக்காவின் ஆல்மேன் வலாரி 68.98 மீட்டர் தூரத்திற்கு வட்டெறிந்து முதல் இடத்தை பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.

தொடரும் தாகம்

இதற்கு முந்தைய தகுதிச்சுற்றில் ஆல்மேன் வலாரி, கமல்பிரீத் கவுர் ஆகியோர் மட்டும்தான் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருந்தனர்.

கமல்பிரீத் கவுர் பதக்கத்தை நெருங்காதது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஒலிம்பிக் தொடரில் இந்தியா தடகளப் போட்டிகளில் இதுவரை பதக்கம் வென்றது இல்லை என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க: சாய்னா நேவால் பாராட்டவில்லை - பி.வி. சிந்து

ABOUT THE AUTHOR

...view details