டோக்கியோ: ஒலிம்பிக் தொடரில் மல்யுத்தம் ஆடவர் 86கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் தீபக் புனியா பங்கேற்றார். தீபக் புனியா, ரவுண்ட் ஆஃப் 8 சுற்றில் நைஜீரியா நாட்டு வீரரையும், காலிறுதிச் சுற்றில் சீன வீரரையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஆனால், அரையிறுதியில் தோல்வியுற்ற புனியா,வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியிலும் தோல்வியடைந்து பதக்கம் பெறாமல் டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில், தீபக் புனியா பயிற்சியாளர் முராத் கைடரோவ், வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு பிறகு நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், சர்வதேச ஒலிம்பிக் குழு அவரின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. இதை இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA) பொதுச்செயலாளர் ராஜிவ் மேத்தா உறுதிச்செய்துள்ளார்.
நடப்பு டோக்கியோ ஒலிம்பிக்கில், ரவிக்குமார் தாஹியா மல்யுத்தத்தில் வெள்ளி வென்றுள்ளார். மற்றொரு மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா நாளை (ஆக.7) நடைபெறும் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்க இருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: TOKYO OLYMPICS: கண்ணீர் சிந்திய வீராங்கனைகள்; பிரதமர் ஆறுதல்