டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று 86 கிலோ எடை பிரிவுக்கான ஆண்கள் மல்யுத்தம் நடந்தது. ரவுண்ட் ஆஃப் 16ல் ( காலிறுதிக்கு முந்தைய சுற்று) இந்திய வீரர் தீபக் புனியா முன்னாள் ஆப்பிரிக்க சாம்பியனான நைஜீரிய வீரர் எக்ரிக்கெமே அஹியோமரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
மல்யுத்தம் - அரையிறுதியில் தீபக் புனியா - அரையிறுதியில் தீபக் பூனியா
டோக்கியோ: ஒலிம்பிக் மல்யுத்தம் ஆண்கள் 86 கிலோ எடை பிரிவில் கலந்துகொண்ட தீபக் புனியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்..
தீபக் பூனியா
காலிறுதியில் சீன வீரர் லின்னை எதிர்கொண்ட தீபக் புனியா அவரையும் வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அதேபோல் 57 கிலோ எடை பிரிவில் கலந்துகொண்ட இந்திய வீரர் ரவி தஹியாவும் அரையிறுதிக்கு முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Aug 4, 2021, 10:45 AM IST