டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ஆடவர் வில்வித்தை போட்டி இன்று (ஜூலை 31) நடைபெற்றது. இதில், இந்திய அணி வீரர் அதானு தாஸ், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தக்காரு புருகாகாவுடன் மோதினார்.
காலிறுதிக்கும் முந்தைய சுற்று என்பதால் மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 6-4 என்ற செட் கணக்கில் புருகாகாவிடம், அதானு தாஸ் தோல்வியடைந்தார்.