தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டோக்கியோ ஒலிம்பிக் 7ஆம் நாள்: களமாடும் முக்கிய இந்திய வீரர்கள் - Manu Bhaker

ஒலிம்பிக் தொடரின் ஏழாவது நாளான நாளை (ஜூலை 29) இந்தியா சார்பில் பங்கேற்கும் முக்கிய வீரர்கள் குறித்த தொகுப்பு.

PV Sindhu
PV Sindhu

By

Published : Jul 28, 2021, 11:00 PM IST

பி.வி.சிந்து - பேட்மிண்டன்

இந்தியாவின் தங்கப்பதக்க நம்பிக்கை வீராங்கனையான பி.வி.சிந்து, நாளை உலகின் 12ஆம் நிலை விரரான டென்மார்க் நாட்டின் மியா பிளிச்ஃபெல்ட்-ஐ ரவுண்ட் ஆஃப் 16இல் சந்திக்கிறார். இவரும் சிந்துவை போல குரூப் சுற்றின் அனைத்து போட்டிகளையும் நேர் செட்டில் வென்றவர் என்பதால் நாளைய ஆட்டத்தில் பொறிபறக்கும் என்பதில் ஐயமில்லை.

மேரி கோம் - குத்துச்சண்டை

குத்துச்சண்டையில் ஆறு முறை உலக சாம்பியனான மேரி கோம், நாளை கொலம்பியாவின் வாலன்சியாவை சந்திக்கிறார். இந்த போட்டியை வெல்லும்பட்சத்தில் மேரி கோம் கால் இறுதிச்சுற்றுக்கு தகுதிப்பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ஆண்கள் ஹாக்கி அணி

இந்திய ஆண்கள் ஹாக்கி மூன்று போட்டிகளில் விளையாடி, நியூசிலாந்து, ஸ்பெயின் அணியை வீழ்த்தி நம்பிக்கையோடு இருந்தாலும், ஆஸ்திரேலியா அணியோடு 1-7 என்ற கோல் கணக்கில் மோசமான தோல்வியடைந்தது அணிக்கு சற்று பின்னடைவுதான். இருப்பினும், நாளைய அர்ஜென்டினாவுடனான போட்டியில் வென்றால் கால் இறுதிக்கு இந்திய ஆண்கள் ஹாக்கி அணி முன்னேறும்.

மனுபாக்கர் - துப்பாக்கிச் சுடுதல்

பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி ஆகியவற்றில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்த மனு பாக்கர், நாளை 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின் தகுதிச்சுற்றில் பங்கேற்கிறார். இதுவரை, இந்த பிரிவில் மனு ஒரு பதக்கம் கூட வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக் 7ஆவது நாள்: இந்தியா பங்கேற்கும் போட்டி அட்டவணை

ABOUT THE AUTHOR

...view details