தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

Tokyo Olympics : கொரிய வீரரை வீழ்த்திய அதானு தாஸ்! - டோக்கியோ

2012 லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற கொரியாவின் ஒ ஜின்ஹைக் (Oh Jinhyek)-ஐ வீழ்த்தினார் அதானு தாஸ்.

By

Published : Jul 29, 2021, 8:57 AM IST

டோக்கியோ : ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அதானு தாஸ் பதக்க பட்டியலுக்கான போட்டிக்குள் நுழைந்துள்ளார்.

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகரில் 2021 ஜூலை 23ஆம் தேதி தொடங்கின. 7ஆம் நாளான இன்று 1/16 வெளியேற்ற சுற்றில் இந்திய வீரர் அதானு தாஸ் 2012 லண்டன் ஒலிம்பிக் வெற்றியாளர் கொரியாவின் ஒ ஜின்ஹைக் (Oh Jinhyek)-ஐ எதிர்கொண்டார்.

இந்தப் போட்டியில் அதானு தாஸ், கொரியாவின் ஒ ஜின்ஹைக் (Oh Jinhyek)-ஐ வீழ்த்தி பதக்க பட்டியலுக்கான போட்டிக்குள் நுழைந்துள்ளார். முன்னதாக அதானு தாஸ் சீன தைபே வீரரை வீழ்த்தியிருந்தார்.

ஒலிம்பிக் தொடரில் இந்திய வில்வித்தை குழு தோல்வி அடைந்து வெளியேறியுள்ளது. இந்தத் தொடரில் கொரியா தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Tokyo Olympics: வில்வித்தை அதானு தாஸ் முன்னேற்றம்

ABOUT THE AUTHOR

...view details