தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 28, 2021, 8:59 AM IST

ETV Bharat / sports

Tokyo Olympics: பி.வி. சிந்து வெற்றி!

ஹாங்காங் வீராங்கனை யி நகன் சியுங் (Yi Ngan Cheung)வை வீழ்த்தினார் பி.வி. சிந்து.

PV Sindhu
PV Sindhu

டோக்கியோ : 2020ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2021 ஜூலை 23ஆம் தேதி தொடங்கின.

இந்தப் போட்டியில் ஆறாம் நாளான இன்று (ஜூலை 28) பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் (ஜெ பிரிவு) ஹாங்காங் வீராங்கனை யி நகன் சியுங் (Yi Ngan Cheung)-ஐ எதிர்கொண்டார்.

இந்தப் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பி.வி. சிந்து, ஹாங்காங் வீராங்கனை யி நகன் சியுங் (Yi Ngan Cheung)-ஐ முதல் மற்றும் இரண்டாம் ஆட்டத்தில் 21-9 மற்றும் 21-16 என நேர் செட்கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் பி.வி. சிந்து, ஜெ பிரிவில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

இதையும் படிங்க : இறகுப் பந்தாட்ட விடிவெள்ளி பிவி சிந்து!

ABOUT THE AUTHOR

...view details