டோக்கியோ: ஒலிம்பிக் தொடரின் ஆண்கள் வில்வித்தையில் ’ரவுண்ட் ஆஃப் 16’ போட்டிகள் நடைபெற்றன. இந்தச் சுற்றின் ஒரு போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த பிராடி எலிசன், இந்தியாவின் பிரவின் ஜாதவ் உடன் மோதினார்.
பொய்த்த நம்பிக்கை!
இதற்கு முன்னர், ’ரவுண்ட் ஆஃப் 32’ இல் பிரவின், உலகின் இரண்டாம் நிலை வீரரான ரஷ்யாவின் கால்சனை வீழ்த்தி நம்பிக்கை அளித்திருந்தார். இருப்பினும், இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்தே எலிசனின் கையே ஓங்கியிருந்தது. எலிசன், 28-27, 27-26, 26-23 என மொத்தமாக 6-0 என்ற நேர் செட்களில் பிரவினை வீழ்த்தி அடுத்தச் சுற்றுக்கு முன்னேறினார்.