தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டோக்கியோ ஒலிம்பிக் 6ஆவது நாள்: இந்தியா பங்கேற்கும் போட்டி அட்டவணை - பிவி சிந்து

டோக்கியோ ஒலிம்பிக்கின் ஆறாவது நாளான நாளை (ஜூலை 28) இந்திய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் விளையாடும் போட்டிகளின் அட்டவணை குறித்த தொகுப்பு.

சாய் பிரனீத், B Sai Praneeth, இந்தியா பேட்மிண்டன்
சாய் பிரனீத்

By

Published : Jul 27, 2021, 9:56 PM IST

டோக்கியோ ஒலிம்பிக்கின் ஆறாவது நாளில் (ஜூலை 28) இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்துவின் போட்டி; அர்ஜுன் லால் மற்றும் அரவிந்த் சிங் ஆகியோர் பங்கேற்கும் துடுப்பு படகுப்போட்டியின் அரையிறுதிச் சுற்று; தமிழ்நாடு வீரர்கள் கே.சி.கணபதி, வருண் தக்கர் பங்கேற்கும் பாய்மரப் படகுப்போட்டியின் தகுதிச்சுற்று ஆகியவை நடைபெறுகின்றன.

மேலும், இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் நாளைய போட்டிகளின் முழுமையான அட்டவணை கீழ்க்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது. (அனைத்தும் இந்திய நேரப்படி).

ஹாக்கி (மகளிர்)

காலை 6:30 - குரூப் 'ஏ' - இந்தியா vs இங்கிலாந்து

பேட்மிண்டன்

காலை 7:30 - குரூப் 'ஜே' - பி.வி.சிந்து vs கன் யி ஹூங் (ஹாங் காங், சீனா) - மகளிர் ஒற்றையர் தகுதிச்சுற்று போட்டி

மதியம் 2.30 - குரூப் 'டி' - சாய் பிரனீத் vs மார்க் கால்ஜோவ் (நெதர்லாந்து) - ஆடவர் ஒற்றையர் தகுதிச்சுற்று போட்டி

வில்வித்தை

காலை 7:31 - தருண்தீப் ராய் vs ஒலெக்ஸி ஹன்பின் (உக்ரைன்) - ஆடவர் தனிநபர் 1/32 எலிமினேஷன்

மதியம் 12:30 - பிரவீன் ஜாதவ் vs கல்சன் பஜார்ஷாபோவ் (ரஷ்யா) - ஆடவர் தனிநபர் 1/32 எலிமினேஷன்

மதியம் 2:14 - தீபிகா குமாரி vs கர்மா (பூடான்) - மகளிர் தனிநபர் 1/32 எலிமினேஷன்

துடுப்புப் படகுப்போட்டி

காலை 8:00 - அர்ஜூன் லால் - அரவிந்த் சிங் - ஆடவர் இரட்டையர் லைட்வெயிட் ஸ்கல்ஸ் அரையிறுதிச் சுற்று

பாய்மரப் படகுப்போட்டி

காலை 8:35 - கே.சி. கணபதி, வருண் தக்கர் - ஆடவர் ஈஆர் ரேஸ் 2. தொடர்ந்து ரேஸ் 3, 4.

குத்துச்சண்டை

மதியம் 2:33 - பூஜா ராணி vs இக்ராக் சாய்ப் (அல்ஜீரியா) - மகளிர் 69-75 எடைப்பிரிவு ரவுண்ட் ஆஃப் 16

இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன்: வெற்றி பெற்றும் வெளியேறிய இந்தியா!

ABOUT THE AUTHOR

...view details