டோக்கியோ: ஒலிம்பிக் தொடரின் வில்வித்தையில் ரவுண்ட் ஆஃப் 32 போட்டிகள் இன்று (ஜூலை 28) நடைபெற்றது. இதில், இந்தியா சார்பில் தீபிகா குமாரி, பூடான் நாட்டைச் சேர்ந்த கர்மா உடன் மோதினார்.
டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை: அடுத்த சுற்றிற்கு முன்னேறினார் தீபிகா - தீபிகா குமாரி
வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரி, பூடான் வீராங்கனையை 6-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி ரவுண்ட் ஆஃப் 16-க்கு முன்னேறினார்.
தீபிகா குமாரி
இப்போட்டியில், தீபிகா 26-23, 26-23, 27-24 என மொத்தமாக 6-0 என்ற நேர் செட் கணக்கில் கர்மாவை வீழ்த்தினார். இதையடுத்து, இன்று நடைபெறும் ரவுண்ட் ஆஃப் 16-இல் தீபிகா குமாரி அமெரிக்காவின் ஜெனிஃபர் முசினோ பெர்னான்டஸை சந்திக்கிறார்.