டோக்கியோ: ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவிற்கான போட்டிகள் இன்று (ஜூலை 27) நடைபெற்றன. முதல் தகுதிச்சுற்று போட்டியில் இந்தியா சார்பில் மனு பாக்கர், சௌரப் சவுத்ரி ஆகியோர் ஓர் அணியாகவும், யஷஸ்வினி சிங் தேஸ்வால், அபிஷேக் வர்மா ஆகியோர் ஓர் அணியாகவும் பங்கேற்றனர்.
முதல் சுற்று
இந்த சுற்றில் மனு - சௌத்ரி அணி 582 புள்ளிகள் பெற்று அடுத்து சுற்றுக்கு முன்னேறிய நிலையில், யஷஸ்வின் சிங் - அபிஷேக் அணி 564 புள்ளிகள் பெற்று முதல் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்தது.
இரண்டாவது சுற்று
இதன் பின் நடைபெற்ற இரண்டாவது தகுதிச் சுற்றில் பங்கேற்ற மனு - சௌத்ரி அணி பங்கேற்றது. இந்த சுற்றில், அனைவருக்கும் தலா இரண்டு வாய்ப்பு கொடுக்கப்படும். இரண்டு வாய்ப்புகளில் மனு பாக்கர் 92, 94 புள்ளிகளையும், சௌரப் சவுத்ரி 96, 98 புள்ளிகளை பெற்று, இந்திய அணி மொத்தமாக 380 புள்ளிகளை பெற்றது.
முதல் நான்கு இடங்களில் இடம்பிடித்தால் பதக்க சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலையில், குறைவான புள்ளிகள் பெற்றதால் மனு - சௌத்ரி இணை இந்த சுற்றோடு வெளியேறியது. மனு பாக்கர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் துப்பாக்கியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக 12ஆவது இடம் பிடித்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒலிம்பிக் ஹாக்கி- ஸ்பெயினை வீழ்த்திய இந்தியா