தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன்: வெற்றி பெற்றும் வெளியேறிய இந்தியா!

ஆண்கள் இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில், சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து இணையை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Tokyo Olympics, Day
Tokyo Olympics, Day

By

Published : Jul 27, 2021, 9:20 PM IST

டோக்கியோ: ஒலிம்பிக் தொடரின் ஆண்கள் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவிற்கான போட்டி இன்று (ஜூலை 27) நடைபெற்றது. இதில், குரூப் 'ஏ'-வில் இடம்பெற்றுள்ள இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை, இங்கிலாந்தின் பென் லேன், ஷான் வெண்டி இணையுடன் மோதியது.

இந்தப் போட்டியில் 21-17, 21-19 என்ற செட் கணக்கில் இங்கிலாந்து இணையை இந்திய இணை வீழ்த்தி, டோக்கியோ ஒலிம்பிக்கில் தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.

வெற்றியும் வெளியேற்றமும்

டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள இந்த இணை, இந்தோனேசியாவிடம் மட்டும் தோல்வியடைந்திருந்தது. காலிறுதிக்கு தகுதி பெற குரூப் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்க வேண்டிய நிலையில், இந்தியா மூன்றாம் இடத்தை பிடித்து ஏமாற்றமளித்தது.

பேட்மிண்டனில் நாளை...

பேட்மிண்டனில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய் பிரனீத் நாளை (ஜூலை 28) நெதர்லாந்து நாட்டின் மார்க் கால்ஜோவ்-ஐ சந்திக்கிறார். மேலும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நாளை நடைபெறும் தகுதிச்சுற்று போட்டியில் ஹாங் காங் வீராங்கனை உடன் இந்தியாவின் பிவி சிந்து மோதவுள்ளார்.

இதையும் படிங்க: ஒலிம்பிக்கில் எதிராளியை கடிக்க பாய்ந்த குத்துச்சண்டை வீரர்

ABOUT THE AUTHOR

...view details