டோக்கியோ ஒலிம்பிக்கின் பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் 69 கிலோ எடைப்பிரிவின் 16ஆவது சுற்றில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன், ஜெர்மனி நாட்டை சேர்ந்த நடின் அபேட்ஸை எதிர்கொண்டார்.
ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடந்த போட்டியில், 28-29, 29-28, 30-27, 30-27, 27-30 என புள்ளிகள் பெற்று 3-2 என்ற கணக்கில் வெற்றிப்பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
ஒலிம்பிக் போட்டியில் இதுவரை இந்தியா பிரகாசிக்கவில்லை. விகாஸ் கிரிஷன், மனிஷ் கவுசிக் , ஆஷிஷ்குமார் ஆகியோர் தோல்வியை தழுவினர். மேரி கோம் மட்டுமே வெற்றியை பதிவு செய்தார்.