டோக்கியோ: ஒலிம்பிக் தொடரின் பெண்கள் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்று இன்று (ஜூலை 26) நடைபெற்றது.
இதில், இந்தியா சார்பாக பங்கேற்ற மணிகா பத்ரா, ஆஸ்திரியா நாட்டின் சோபியா போல்கனோவா உடன் மோதினார். முதல் இரண்டு சுற்றுகளிலும் சிறப்பாக விளையாடிய மணிகா பத்ரா, இப்போட்டியில் சோபிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சோஃபியா முதல் செட்டை 11-8 என்ற புள்ளிகளை வென்று மணிகா பத்ராவின் நம்பிக்கைக்கு வேட்டு வைத்தார். அடுத்தடுத்த செட்டை 11-2, 11-5, 11-7 என்ற புள்ளிகளில் வென்றார்.
இதன்மூலம் 4-0 என்ற செட் கணக்கில் மணிகா பத்ராவை சோஃபியா வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதனால், ஒற்றையர் பிரிவில் இருந்து மணிகா பத்ரா வெளியேறியுள்ளார்.
இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டி: சஜன் பிரகாஷ் ஏமாற்றம்